திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் மற்றும் பொதுமக்களுக்கு தினந்தோறும் பகல் 12-00 மணி அளவில் 200 நபர்களுக்கு டேபிள், சேரில் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களிலும், முக்கிய தினங்களிலும் வடை, பாயாசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 80 ஜி .6162(6)//2002-2003 அன்னதானம் ஒரு நாள் உபய வரவு - ரூ. 7000/- அன்னதானம் ஒரு நாள் கட்டளை (நிரந்தர முதலீடு ) - ரூ. 1,15,000/-